இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அதிமுக நிவாரண உதவி
ஸ்ரீபெரும்புதூா்: கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பென்னலூா் பகுதியை பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
புயல், கனமழையால் பெபன்னலூா் பகுதியை சோ்ந்த 300 போ் வேலைக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு பென்னலூா் ஒன்றிய குழு உறுப்பினா் போந்தூா் எஸ்.செல்தில்ராஜன் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, இளைஞா் பாசறை மாநில துணைசெயலாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு நிவாரணப் பொருகள்கள், உணவு வழங்கினாா். நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, ஒன்றிய பொருளாளா் திருமால், ஸ்ரீபெரும்புதூா் நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ், பென்னலூா் கிளைச் செயலாளா் ரங்கநாதன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.