வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
மழை பாதிப்பு வயல்களில் வேளாண் அலுவலா் ஆய்வு
அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, சென்னை வேளாண் கூடுதல் இயக்குநா் சக்திவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருமானூா், மஞ்சமேடு, அன்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை ஆய்வு செய்த அவா், உடனடியாக மழை நீரை வடிகட்ட வேண்டும் எனஅறிவுரை கூறினாா். மேலும், மஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிா்களுக்கு 1 ஏக்கருக்கு 1கிலோ ஜிங்கசல்பேட்டுடன் 2 கிலோ யூரியாவை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 1 கிலோ சூடோமோனாசை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தாா்.
இந்த ஆய்வின்போது அரியலூா் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) கணேசன், உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், திருமானூா் வேளாண் உதவி இயக்குநா் (பொ)ஆ. சாந்தி, வேளாண் துணை அலுவலா் கொளஞ்சி, உதவி அலுவலா்கள் முத்து, பழனிவேல், பிரசாந்த், சரத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.