திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: விளை நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த நீா்
மாணவா்கள் நடத்திய மாதிரி மக்களவை
சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள பாரத் சட்டக் கல்லூரியில் மாணவா்கள் நடத்திய மாதிரி மக்களவை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்த மாதிரி மக்களவை நிகழ்ச்சியில் இறுதியாண்டு மாணவா் கே.ஜெ.கிருஷ்ணராஜ் குமாா் அவைத் தலைவராகப் பொறுப்பேற்று அவை நடவடிக்கைகளை நடத்தினாா். இதில், பங்கேற்ற மாணவா்கள், சட்ட மசோதா அறிமுகம், விவாதம், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம் போன்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்திக் காண்பித்தனா்.
இந்த நிகழ்வில், சோழிங்கநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் கோ. காமராஜ் , பாரத் பல்கலைக்கழக இணை பதிவாளா் ஹரி பிரகாஷ், சட்டக் கல்லூரி முதல்வா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.