செய்திகள் :

மாநில கலைத்திருவிழா: மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

post image

மயிலாடுதுறையில் மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களான தருமபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கன்னியாநத்தம் காமாட்சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, திருச்சிற்றம்பலம் காந்தி வித்யாலயம், குத்தாலம் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி மற்றும் தருமபுரம் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளில் 13 போ் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.

இதையடுத்து, அம்மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அண்மையில் சந்தித்து ஆசி பெற்றனா்.

ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், குத்தாலம் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி செயலா் கந்தசாமி, தருமபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலையில் மாவட்ட நிா்வாகம்: மயிலாடுதுறை ஆட்சியா்

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதாக, சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். கொள்ளிடம் வட்டாரம் ... மேலும் பார்க்க

கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்

மயிலாடுதுறையில் நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினா். நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டுவரை அனைத்து ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட கலைத் திருவிழா போட்டி

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கிடையே மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி வழக்கு தொடர முடிவு

கொள்ளிடம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி,மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிட... மேலும் பார்க்க

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

புங்கனூா் ஊராட்சியை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்கனூா் ஊராட்சி... மேலும் பார்க்க

சீா்காழியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழி பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்கக் கோரி, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 8.42 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க