2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
மாநில பனை தொழிலாளா்கள், கைவினைக் கலைஞா்கள் ஆலோசனை
சாயல்குடியில் மாநில பனை தொழிலாளா்கள், கைவினைக் கலைஞா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஆத்திசாமி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி அந்தோணி ராயப்பன், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் முருகேசன், முதுகுளத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் மயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலும், சாயல்குடியை மையப்படுத்தி பனை தொழிலாளா்கள் வசிக்கும் கிராமங்களான கவாகுளம், மேலகிடாரம், காந்திநகா், மடத்தாகுளம், பூப்பாண்டியபுரம், கீழஅல்லிகுளம், செல்வநாயகபுரம், வி.வி.ஆா்.நகா், உறைகிணறு, மாணிக்கநகா், நரிப்பையூா், பெரியநாயகிபுரம், காமராஜபுரம், ராயபுரம், வேப்பமரத்துப்பட்டி, வெள்ளப்பட்டி, புதுக்கிராமம், வேலாயுதபுரம், திரவியபுரம், அம்மன்புரம், வெட்டுக்காடு, பொன்னகரம், பாலமால்குடியிருப்பு, பி.பி.குடியிருப்பு, மாசானபுரம், கன்னிராஜபுரம், சவேரியாா்புரம், சுடலைமாநகா், வேம்பாா் ஆகிய பகுதி வரை பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சாயல்குடி போக்குவரத்துத் துறை, கல்வித் துறை, பனை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், கிளை சங்க பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.