வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கிற படத்தை உருவாக்கி வருகிறார்.
இதில் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது.
The Legacy of our #BisonKaalamaadan will resonate across Tamilnadu through @5starsenthilk#BisonKaalamaadanFromDiwali#BisonKaalamaadanOnOct17#BisonKaalamaadan@applausesocial@NeelamStudios_@nairsameer@deepaksegal@beemji@Tisaditi#DhruvVikram@anupamahere… pic.twitter.com/2jytpTwF0y
— Mari Selvaraj (@mari_selvaraj) July 18, 2025
நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. இரஞ்சித் மற்றும் ஆப்லாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
நீண்டகால தயாரிப்பிலிருக்கும் இப்படம், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக். 17 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தனுஷின் இட்லி கடை படத்தின் பாடல் வெளியீடு எப்போது? ஜிவி பிரகாஷ் அப்டேட்!