செய்திகள் :

'மாற்றத்திற்கான ஒரு விருந்து' - நலிவுற்றோருக்கான நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு

post image

எழுத்தாளர், சமூக தொழில்முனைவோர் என்ற பன்முக ஆளுமையாக அறியப்படும் திரு. ஸ்ரீராம் V அவர்களால் நிறுவப்பட்டது நாளந்தாவே ஃபவுண்டேஷன். இது 20 ஆண்டுகால சேவை பாரம்பரியத்தை கொண்ட இலாபநோக்கற்ற ஒரு அமைப்பாகும். பல விருதுகளை வென்றிருக்கும் இந்த சமூகசேவை அமைப்பானது, வசதியற்ற, நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் நோக்கத்தோடு கலை வடிவங்களைப் பயன்படுத்தி வருகிறது.

நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு

புதியவற்றை கண்டறியும் ஆர்வம், படைப்பாக்கத்திறன், தைரியம் மற்றும் கனிவான நடத்தை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் அனுபவங்களையும் மற்றும் பாதுகாப்பான கற்றல் அமைவிடங்களையும் உருவாக்குவதன் வழியாக சிறப்பான சேவையை நாளந்தாவே ஃபவுண்டேஷன் வழங்கி வருகிறது. நாளந்தாவே ஃபவுண்டேஷன் விருந்து மாற்றத்திற்கான ஒரு விருந்து என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

மாஸ்டர் செஃப் இந்தியா (தமிழ்) நிகழ்ச்சியின் நடுவரும், உணவு வரலாற்றியல் நிபுணருமான திரு. ராகேஷ் ரகுநாதன் அவர்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இந்நிகழ்வு தனித்துவமானதாக இருக்கும். பார்க் ஹயாட் சென்னையின் தி அபார்ட்மெண்ட் அமைவிடத்தில், 2025 ஜூன் 14 சனிக்கிழமையன்று, மாலை 6:30 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வோடு ஆரம்பமாகும். நாளந்தாவே, அதன் மூன்றாவது தசாப்தத்தில் நுழைகிற தருணத்தைக் கொண்டாடுகின்ற இந்நிகழ்வில், பங்கேற்கும் அனைவரும் சமூகத்திற்கு, குறிப்பாக வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது இந்நிகழ்வின் சிறப்பை உயர்த்துகிறது.

நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு
நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு

இந்த மாலைநேர விருந்து நிகழ்வின் வழியாக திரட்டப்படும் நிதியானது, போதுமான வசதியற்ற பள்ளிகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கலைகள் அடிப்படையிலான நலவாழ்வு செயல்திட்டங்களுக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும். மனநலப்பாதிப்புகளிலிருந்து விடுபட்டு அவர்கள் குணமடைவதற்கும், அவர்களது உள்ளார்ந்த உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தவும் மற்றும் உணர்வுரீதியான நலவாழ்வை உருவாக்கிக் கொள்ளவும் நாளந்தாவே சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்.!

விகடன் செய்தி எதிரொலி: கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்துக்கு அரசு வீடு; உதவிய நல்லுள்ளங்கள்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்ப... மேலும் பார்க்க

மழை வெள்ளம்.. மன வெள்ளம் | குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின் வேர் - யார் இவர்?

ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவர் உயரத்தை (330 மீட்டர்) விடவும் உயரமாக கட்டப்பட்ட ரயில் பாலமான செனாப் பாலத்தை (359 மீட்டர்) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உலகின் மிக உயர... மேலும் பார்க்க

`அந்த 10 ரூபாய் இல்லனாலும்கூட..!’ - 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் மறைவு; சோகத்தில் பட்டுக்கோட்டை மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கனகரத்தினம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பக... மேலும் பார்க்க

"ராகி களி, கீரை தவறாமல் தட்டில் இருக்கும்" - சாய் பல்லவியின் 94 வயது பாட்டி சொல்லும் சீக்ரெட்!

முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர்.திரைத்துறையில் உச்சத்திலிருந்தாலும் சொந்த கிராமத்தில் நடைபெறும் சுக, துக்க நிகழ்வுகளில் மக்களோடு மக்களாக இணைந்து பங்கேற்... மேலும் பார்க்க