மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத் திறனாளி நலத் துறை அலுவலா் உலகநாதன் தலைமையில் கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாரதா முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில், காது, மூக்கு தொண்டை மருத்துவா், உடல் இயக்க மருத்துவா், மனநல மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த மதிப்பீடு செய்தனா். தகுதியானவா்களுக்கு உடனுக்குடன் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் சுமாா் 100 போ் கலந்து கொண்டு பயன் அடைந்தனா். மாற்றுத்திறனாளிகள் நல உதவி அலுவலா் கோகிலா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.