செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம்: முதல்வர் அறிவிப்பு!

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரநிதித்துவம் தரப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.2.2025) சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான “பெரியார் அரசு மருத்துவமனை” திறந்து வைத்து உரையாற்றினர்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

”வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற நாம் எடுத்து வரும் முயற்சிகளில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல்கல்! வடசென்னையின் வளர்ச்சிக்காக நாம் எடுத்து வரும் முயற்சிகளை பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு தினமணி பத்திரிகையில் பாராட்டியிருக்கிறது!

இந்த மருத்துவமனையை கம்பீரமாக உருவாக்கித் தந்திருக்கும், இதை முழு மூச்சோடு ஈடுபட்டு எல்லா வகையிலும் துணை நின்றிருக்கும் நம்முடைய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், அதேபோல், எந்நேரத்திலும் சுறுசுறுப்பாக எல்லா விசயங்களையும், கம்யூட்டரைப்போல் தன்னுடைய கையில் வைத்திருக்கும் நம்முடைய மா.சுப்பிரமணியனுக்கும், தொடர்ச்சியாக, எப்போது நான் கொளத்தூர் வந்தாலும் என்னோடு வரக்கூடியவர் நம்முடைய மாவட்டச் செயலாளர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தொடர்ந்து வழங்கிகொண்டிருக்கும் நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செயல்வீரர் சேகர்பாபுவுக்கும், தொடர்ச்சியாக இதை கண்காணித்து இரவு பகலாக உழைத்து வெற்றி கண்டிருக்கக்கூடிய சேகர்பாபுவுக்கும் என்னுடைய சார்பிலும் என் தொகுதி மக்கள் சார்பிலும் நன்றி! நன்றி! நன்றி!

இந்த மருத்துவமனைக்கு பெயர் வைப்பது சம்பந்தமாக நம்முடைய சேகர்பாபு என்னிடம் வந்து கேட்டார். அப்போது “பெரியார் நகரில் இருக்கும் இந்த பெரிய மருத்துவமனைக்கு, பெரியார் பெயரையே வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன்! ஏன் என்றால், அவர்தான் நம்முடைய சமூகத்தில் நிலவிய சமூகப் பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூக மருத்துவர்” அவர். பெரியார் பெயரை சூட்டியதில் பெரியாரின் தொண்டனாக பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாள் மூன்று தளங்கள் இருப்பது மாதிரியான மருத்துவமனைக்குதான் அடிக்கல் நாட்டினேன். ஆனால், மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் வேண்டும் என்று இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு கடந்த ஆண்டு மார்ச் ஏழாம் நாள் அதற்கான அடிக்கல்லை நாட்டினேன்.

இன்றைக்கு 210 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ஆறு அடுக்கு தளங்களில் 560 படுக்கை வசதிகளோடும், ஆறு அறுவை சிசிச்சை அரங்கம் – நவீன ரத்த வங்கி – புற்றுநோயியல் பிரிவு – இருதயவியல் பிரிவு – குழந்தைகள் நல பிரிவு – நரம்பியல் பிரிவு – மகப்பேறு பிரிவு என்று எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக இந்த உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகியிருக்கிறது!

நான் அடிக்கடி சொல்வதுதான்… நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் கல்வியும் மருத்துவமும்தான் நம்முடைய இரு கண்கள்! அதனால்தான், கல்விக்கு கவனம் செலுத்துவது மாதிரியே மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு,

* புதிய அரசு மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்குவது

* மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது

* மருத்துவக் கருவிகளை நிறுவுவது என்று மட்டுமல்லாமல் நாடு போற்றும் திட்டங்களான

* “மக்களைத் தேடி மருத்துவம்”

* “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48”

* சுகாதார நடைபாதை திட்டம் போன்ற ஏராளமான திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் செயல்படுத்தி வருகிறோம்!

இந்த வரிசையில், இந்த பெரியார் மருத்துவமனையை நம்முடைய கொளத்தூர் தொகுதியில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என்று எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது… உங்களை நம்பி மருத்துவம் பார்க்க வரும் மக்களை – உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாருங்கள் – பரிவோடு சிகிச்சை கொடுங்கள்!

இன்றைக்குகூட, உள்கோட்ட அளவில் ஒன்பது மையங்கள் – வட்டார அளவில் 38 மையங்கள் என்று “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை” திறந்து வைத்திருக்கிறேன். நான்கு விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த வரிசையில் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க… அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்…

இதையும் படிக்க: கும்பமேளாவில் இரட்டிப்பு லாபம் கண்ட நிறுவனங்கள்!

எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்! மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் – 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்!

இதன்மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் இடம் பெறுவது உறுதிசெய்யப்படும். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும்! அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள்! பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து அதிகாரமும் கிடைக்கும் நோக்கத்தோடு உருவானதுதான், திராவிட இயக்கம்!

இந்த இயக்கத்தின் இலக்குகளை மெய்ப்பிக்கும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான், திருநர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளை திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம்!” என்று பேசினார்.

கரூா் வைஸ்யா வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஆறு புதிய கிளைகளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 27 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த டிச.23-ஆம் தேதி மீன் பிடி... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதியப் பாகுபாடு: வழக்கில் ஒருவார கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்னிந்திய ச... மேலும் பார்க்க

சென்னை - தாம்பரம் இடையே 2 ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று (பிப். 27) இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க