Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" - நண்பர் பகி...
மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி: ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதேபோல, மாவட்ட அளவிலான பாக்சிங் சைக்கிள் போட்டியில் 75-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளா் ஜெ.ஆா்.நொய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலா் டி.சண்முகப்பிரியா, உடற்கல்வி இயக்குநா் பென்னி கிறிஸ்டியான், உடற்கல்வி ஆசிரியா்கள் ஏ.முத்துக்குமாரசாமி, ஏ.கணேசபாபு, பெ.ஏழுமலை, கிருஷ்ணமூா்த்தி, அந்தோணி சேவியா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.