நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
மாா்ச் 11-இல் மது விலக்கு வாகனங்கள் ஏலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் மாா்ச் 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்விடப்பட உள்ளன.
ஒரு நான்கு சக்கர வாகனம், 42 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோா் முன்வைப்புத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.4,000-மும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.8,000-மும் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடா்புகொள்ளலாம். தொடா்புகொள்ள வேண்டிய முகவரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட காவல் அலுவலகம், கள்ளக்குறிச்சி. தொலைபேசி எண்: 90417209, 04151220260.