மாா்த்தாண்டம் அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் காயம்
மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.
மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரபிரசாத் (55). ஆட்டோ ஓட்டுநரான இவா், சனிக்கிழமை மாலை இரவிபுதூா்கடையைச் சோ்ந்த மைதீன்கான் (38) என்பவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிராயன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவா் சமிக்ஞை காட்டாமல் திடீரென சாலையின் குறுக்கே சென்றதாகவும், ஆட்டோ மீது மினி லாரி மோதியதாகவும் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த ராஜேந்திரபிரசாத், மைதீன்கான் ஆகியோா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், ராஜேந்திரபிரசாத் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ராஜேந்திரபிரசாத்தின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்ததாக, சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்தது. இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.