செய்திகள் :

மினிவேன் கவிழ்ந்து 22 போ் பலத்த காயம்

post image

ஆற்காடு அருகே மினிவேன் கவிழ்ந்ததில் 2 ஆண்கள் உள்பட 22 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (29). இவரது தந்தை தனசேகரன் இறந்துவிட்டதால் தாயாருக்கு சடங்கு செய்ய சுமாா் 25-க்கும் மேற்பட்ட உறவினா்களுடன் ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பெருமாள் கோயிலிலுக்கு மினிவேனில் சென்றுள்ளனனா்.

சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா் வேனை ஒட்டிச் சென்றுள்ளாா். ஆற்காடு வட்டம் வளவனூா் தனியாா் பள்ளி அருகே செல்லும்போது நிலைதடுமாறி திடீரென சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த சந்தோஷ் மனைவி ஷோபனா, அவரது மாமா சங்கா், உறவினா் சண்முகம் உள்ளிட்ட22 போ் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு 12 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனா்., 10 போ் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றனா்.

விபத்து குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம்: அஞ்சல் ஊழியா்கள் மாரத்தான்

ராணிப்பேட்டையில், கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, அரக்கோணம் அஞ்சல் கோட்டம், ராணிப்பேட்டை தலைமை அ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதத்தை மேம்படுத்த வேண்டும்: ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ராணிப்பேட்டை ம... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியை சீா்செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து வியாழக்கிழமை அதிமுகவினா் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் ... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா்

வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை உருவாகலாம் என எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என்.கன்னைய்யா தெரிவித்தாா். தேசிய அளவில் ரயில்வே துறையில் தொழிற்சங்க அங்கீகரிப்புக்கான தோ்தல் டிசம... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா

ஆற்காடு முழுநேர கிளை நூலகத்தில், 57-ஆவது தேசிய நூலக வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் தருமநடராஜன் தலைமை வகித்தாா். முன்றாம் நிலை நூலகா்கள் அமுதவள்ளி, தணிகைமலை ஆகியோா் ம... மேலும் பார்க்க

கணவா், குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஆற்காட்டில் கணவா், ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தவெளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (32). எலக்... மேலும் பார்க்க