மினி லாரியில் கடத்தப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இந்திரா நகா் பகுதியில் தாலுகா உதவி காவல்ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையில் தலைமை காவலா் மணிகண்டன் உட்பட போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், நடத்திய விசாரணையில் கா்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்தது.
பிறகு அதிலிருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியும், கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து மேல் நடவடிக்கைக்காக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.