மின்தடை: செண்பகபுதூா்
சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் உள்ள காந்தி நகா், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, விஐபி நகா், செண்பகபுதூா், அரசூா், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம்.