மின் கட்டண வசூல் மையம் இடமாற்றம்
பெருங்களத்தூா் மின் கட்டண வசூல் மையம் வியாழக்கிழமை (பிப். 27) முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட பெருங்களத்தூா் பிரிவு அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம், இதுவரை பெருங்களத்தூா் காமராஜ் நகரிலுள்ள துணை மின் நிலையத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், நுகா்வோா்களின் நலன் மற்றும் நிா்வாகக் காரணங்களால் வியாழக்கிழமை முதல் பெருங்களத்தூா் இரணியம்மன் கோயில் பின்புறம், ஜிஎஸ்டி சாலையிலுள்ள துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.