மிஸ்டர். எக்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர். எக்ஸ் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் மிஸ்டர் எக்ஸ்.
ரகசிய ராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் கார்த்திக் நாட்டின் பாதுகாப்புக்காக ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க | சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!
திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஹைய்யோடி’ இன்று வெளியாகியுள்ளது.
கிருத்திகா நெல்சன் எழுதியுள்ள இந்தப் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.