பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்...
`மீண்டும் ஒருவரை நம்பவும், என்னை நானே நேசிக்கவும்..!' - கணவர் வெற்றி வசந்த் குறித்து வைஷ்ணவி
`சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்திற்கும், `பொன்னி' வைஷ்ணவிக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பிசியாக அவரவர் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வைஷ்ணவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
" என்னை மிகவும் நேசித்ததற்கு நன்றி. என் முகத்தில் இந்த அளவுக்கான மகிழ்ச்சியை நான் பார்த்ததில்லை. அந்த மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நன்றி. என் காதல் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. என்னை சிரிக்க வைக்கிறீர்கள். உங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சந்தோஷத்தை வேறு யாராலும் எனக்குக் கொடுக்க முடியாது. இந்த அளவுக்கு என்னைப் பற்றி நான் யாரிடமும் இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. என்னை முழுவதும் தெரிந்து கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான்! நீங்கள் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு நான் என் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறேன்.
இருந்தும் நீங்கள் வந்து தரையில் உடைந்து கிடந்த துண்டுகளை எடுத்து என்னை மீண்டும் ஒன்றாக சேர்த்தீர்கள். மீண்டும் ஒருவரை எப்படி நம்புவது என எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள் ; என்னை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். நீங்கள் அற்புதமான மனிதராக இருந்ததற்கு மட்டுமல்ல இந்தப் பயணத்தில் சிறந்த நபராக என்னை மாற்றியதற்கும் உங்களுக்கு நன்றி! ஐ லவ் யூ ஆல்வேஸ்! " என நெகிழ்வாக குறிப்பிட்டிருக்கிறார்.
`ஐ லவ் யூ மா' என அவருக்கு கமென்ட் செய்திருக்கிறார் வெற்றி வசந்த். கணவருக்கு நன்றி தெரிவித்து அவரது மனைவி வைஷ்ணவி பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.