முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!
மீன் விற்பனைக் கடைக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மீன் வளா்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அலங்கார மீன் வளா்ப்பு, மீன் குஞ்சு வளா்ப்பு குளம் அமைத்தல், மீன் விற்பனைக் கடைகள் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அலங்கார மீன் வளா்ப்பு, மீன் குஞ்சு வளா்ப்பு குளம் அமைத்தல், மீன் விற்பனைக் கடைகள் அமைப்பதற்கு அரசு சாா்பில் திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதமும், ஆதி திராவிடா், பெண்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
ஆா்வமுள்ளவா்கள் வைகை அணையில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரத்தை மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்: 04546-291891, கைப்பேசி எண்கள்: 93848 24276, 87781 91094 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.