கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
முக்கூடல் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மாமியாரை அரிவாளால் வெட்டியதாக, மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளம் கிராமத்தைச் சோ்ந்த பால்துரை - துரைச்சி (55) தம்பதி, தனது மகள் சீதாவை வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனா்.
கலியன்குளத்தில் மனைவியுடன் வசித்து வந்த மாயக்கண்ணன், தினமும் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். திங்கள்கிழமை மனைவியுடன் தகராறு செய்த மாயக்கண்ணனை துரைச்சி சமாதானப்படுத்தினாராம்.
அப்போது அவரை மாயக்கண்ணன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். தலையில் பலத்த காயமடைந்த துரைச்சி திருநெல்வேலி அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயக்கண்ணனை கைது செய்தனா்.