107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை என பஜக தலைவர் தேவெந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 219 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 55 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனை (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனை 19 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
இந்த வெற்றி குறித்து பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், “இந்த வெற்றியின் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே ‘உண்மையான சிவசேனை’ என்றும், அஜித் பவார் தலைமையிலான கட்சியே ‘உண்மையான் தேசியவாத காங்கிரஸ் கட்சி’ என்றும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மகராஷ்டிர மக்கள் எங்களுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கியுள்ளனர். மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியை எங்களுக்கு அளித்த மக்களுக்கு நன்றி” என்று கூறினார்.
அடுத்த முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை. அடுத்தக்கட்ட முடிவுகளை கூட்டணிக் கட்சி தலைவர்கள் இணைந்து முடிவு செய்வார்கள்.
இது மஹாயுதி கூட்டணி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் ராம்தாஸ் அதாவலே ஆகியோரின் ஒற்றுமையின் வெற்றி” என்று அவர் தெரிவித்தார்.