முதல் டெஸ்ட்: இருவர் அரைசதம்; முதல் நாளில் மே.இ.தீவுகள் 250 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மிக்கில் லூயிஸ் அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 3 ரன்கள் மற்றும் 10 ரன்களில் முறையே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்..! வைரலாகும் விடியோ!
ஜஸ்டின் கிரீவ்ஸ் 11 ரன்களுடனும், ஜோஷ்வா டா சில்வா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.