வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான லோனாவாலா பங்களா உள்ளது. இந்த பங்களாவில் மார்ச் 7 முதல் ஜூலை 18 ஆகிய இடைபட்ட தேதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின்புற சுவரின் கம்பி வலையை வெட்டி பங்களாவுக்குள் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் முதல் மாடி கேலரியில் ஏறி, ஜன்னல் கிரில்லை வலுக்கட்டாயமாக திறந்து பங்களாவுக்குள் நுழைந்தனர். அவர்கள், ரூ.50,000 ரொக்கம் மற்றும் சுமார் ரூ.7,000 மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.57,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளரான 54 வயது முகமது முஜிப் கான் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் பரவலாக மழை!
சம்பாஜிநகரைச் சேர்ந்த கான், மார்ச் 7 முதல் ஜூலை 18, 2025 வரை பங்களாவில் யாரும் இல்லாத காலகட்டத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார். புகாரைத் தொடர்ந்து, லோனாவாலா கிராமப்புற போலீஸார், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்தை போலீஸார் ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் பொருள்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.