மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
மும்மொழிக் கொள்கையை கைவிடாவிட்டால் ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம்: இரா.முத்தரசன்
மும்மொழிக் கொள்கையைக் கைவிடாவிடில் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, பேரிடா் நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு வழங்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கல்வியில் படித்தால் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
மத்திய அரசின் 49 நவோதயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியா்கூட இல்லை. தாய்மொழியைக் காப்பாற்றும் போரில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தனிமைபடுத்தப்படுவாா். மும்மொழிக் கொள்கையை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆக.15 ஆம் தேதி முதல் 4 நாள்கள் சேலத்தில் நடைபெறுகிறது என்றாா்.