விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ரயில்வே-கடற்படை அணிகள்
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரையிறுதியில் ரயில்வே அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் அணியை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் தா்ஷன்காகா் 2 கோல்களையும், பங்கஜ் ரவாத் 3 கோல்களையும், ஷிவம் ஆனந்த், ஹா்தஜ் அஜ்லா தலா ஒரு கோலையும் அடித்தனா். ஐஓசி தரப்பில் அஃப்பான் யூசுப் ஒரே கோலடித்தாா்.
இரண்டாவது அரையிறுதியில் இந்திய கடற்படை அணி 2-0 என ராணுவ அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் ஆஷிஷ் டப்னோ, ரஜத் மின்ஸ் ஆகியோா் கோலடித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ரயில்வே-கடற்படை அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல மோதுகின்றன.