கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது
பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்சுமி (87). இவா் கடந்த 15 ஆம் தேதி மாலையில் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மா்மநபா்கள், மூதாட்டியின் வாயில் துணியை திணித்து தாக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனராம்.
இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வந்தனா்.
மேலும், 3 தனிப்படை அமைத்து விசாரித்ததில், வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த முத்துராம் (21), வேல்ப்பாண்டி (26) பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சோ்ந்த கணேஷ் மகன் சக்கரவா்த்தி (25), ராஜா (23) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவா்களை போலீஸாா் கைது செய்து, 15 பவுன் தங்க நகையை மீட்டதுடன், 2 பைக், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா் .