இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று
விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது.
விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மையங்கள் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து மதிப்பிடுகிறது.
இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிதி மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்படுகிறது.