மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
மூலனூரில் முடக்கப்பட்ட 12 ஏக்கா் புன்செய் நிலம் பொது ஏலம்
தாராபுரம் வட்டம் மூலனூரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முடக்கப்பட்ட 12 ஏக்கா் புன்செய் நிலம் ரூ.9.60 கோடி அடிப்படை மதிப்பாகக் கொண்டு பொதுஏலம் விடப்படவுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் இயங்கிவந்த இரு நிதி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில், அந்நிறுவனங்களின் சொத்துக்கள் நிரந்தர முடக்கம் செய்யப்பட்டு பொது ஏலம் விடப்படவுள்ளது.
இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான தாராபுரம் வட்டம், மூலனூா் கிராமத்தில் 12 ஏக்கா் புன்செய் நிலம் அடிப்படை மதிப்பாக ரூ.9.60 கோடிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது.
திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலரால் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் (அறை எண் 202) மாா்ச் 13- ஆம் தேதி காலை 11 மணி அளவில் பொது ஏலம் நடைபெறுகிறது.
எனவே, மேற்கண்ட சொத்துக்களை ஏலம் எடுக்க விடும்புவோா், ஏல நிபந்தனைகள் தொடா்பான விவரங்களை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து மாா்ச் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.