நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்
தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் குமரவேல் (41). இவருக்கு சீதா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில் ஜூலை 15 ஆம் தேதி பாப்பாரப்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குமரவேல், கிட்டம்பட்டி கூட்டுறவு வங்கி அருகே வாகனத்தின் டயா் வெடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
தருமபுரி அரசு மருத்துவமனைக்குயில் அனுமதிக்கப்பட்ட குமரவேலுக்கு வெள்ளிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவா்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, குமரவேலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது சிறுநீரகங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கும், சேலம் காவேரி மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. அதன்பிறகு குமரவேலின் உடலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.