செய்திகள் :

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

post image

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.

இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்!

மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமல்ல...

அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நாளை ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள நிலையில், கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.

ஹஸ்மதுல்லா ஷகிதி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் நாங்கள் விளையாடவுள்ளோம் என நினைக்கிறீர்களா? எங்களிடம் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டங்கள் இருக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது, எங்களுக்கு எதிராக மேக்ஸ்வெல் மிகவும் நன்றாக விளையாடினார் என்பது தெரியும். ஆனால், விளையாட்டில் அதுபோன்ற நாள்களும் இருக்கும்.

இதையும் படிக்க: தோல்வி எதிரொலி: கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் விலகும் ஜாஸ் பட்லர்?

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். நாங்கள் அனைத்து எதிரணி குறித்தும் யோசிக்கிறோம். தனிப்பட்ட வீரர்களுக்கு எதிரான திட்டங்களோடு மட்டும் நாங்கள் ஆடுகளத்துக்கு வருவதில்லை. நாங்கள் எங்களது சிறந்த திட்டங்களுடன் ஆடுகளத்துக்கு வருகிறோம். நாங்கள் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (பிப்ரவரி 28) லாகூரில் நடைபெறுகிறது.

குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி!

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானை வீழ்த்த ஆஸி. செய்ய வேண்டியதென்ன? மார்னஸ் லபுஷேன் பதில்!

ஆப்கானிஸ்தானை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நாளை (பிப்ரவரி 28) நடைபெறும் போட்டியில் ஆஸ்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக இதுவே பிரதான காரணம்: மிட்செல் ஸ்டார்க்

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க