அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
மேட்டூர் அணை நீர்வரத்து 18,610 கன அடியாக நீடிப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 18,610 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நீர்வரத்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 18,610 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.46 அடியாகவும், நீர் இருப்பு 92.61 டிஎம்சியாகவும் உள்ளது.