மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந்து 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சிராஜுதீன் மொல்லா மற்றும் தேபப்ரதா சக்ரவர்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தமாகாளி படகுப் பாதைக்கு அருகிலுள்ள ராயல் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். உள்ளூர் கடையில் பொருள்களை வாங்கும்போது, கடைக்காரர் அவற்றைப் பார்த்ததும் அந்த ரூபாய் நோட்டுகள் போலியானவை என்று சந்தேகித்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்
உடனடியாக அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீஸார் வந்து இருவரையும் கைது செய்தனர். இந்த இருவரிடமிருந்தும் சில அசல் இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நேபாள ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு சிராஜுதீனிடமிருந்து இரண்டு ஆதார் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.