செய்திகள் :

"ரப்பர் தொழிலார்களின் குறைகளை யாருமே கேட்கவில்லை; ஆனா..." - புதிய அதிகாரிக்கு தொழிற்சங்கம் பாராட்டு

post image

தமிழ்நாடு அரசின் ரப்பர் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ரப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோதையார் உள்ளிட்ட இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்கூடம் அமைந்துள்ளது.

இந்த ரப்பர் தோட்டங்களில், ரப்பர் பால் உற்பத்தி, பதப்படுத்துதல் போன்ற பணிகளை அரசு ரப்பர் கழகம் மேற்கொள்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன்
குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன்

இந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம், போராட்டம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில், அங்கு அரசு ரப்பர் தோட்டம் கழக இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் IFS அதிகாரி என். சதீஷ், தொழிலாளர்கள் பிரச்னை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

IFS அதிகாரி என். சதீஷ்
IFS அதிகாரி என். சதீஷ்

இந்த நிலையில், குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் என். சதீஷின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் M. ஜோசப் ஜெரால்டு தனது அறிக்கையில், "அரசு ரப்பர் தோட்டம் ஆரம்பித்த நாள் முதல் என் நினைவுக்கு எட்டிய வரை எந்த நிர்வாக இயக்குநரும் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க எங்களை (தொழிற்சங்கங்களை) அழைத்ததில்லை.

இயக்குநர் என். சதீஷ் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீது காட்டுகின்ற கனிவு, அன்பு‌, பாசம், நேசம், அக்கறையைக் கண்டு எங்களது மனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இயக்குநருக்கு அனைத்து கோட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

PMK: ``வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு; படை திரள்வோம்'' - பாமக அன்புமணி ராமதாஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய ... மேலும் பார்க்க

சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி... மேலும் பார்க்க

`இந்த நாலு பேரையும் நிக்க வச்சு கேள்வி கேக்கணும்' - உயரதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டும் DSP

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மே... மேலும் பார்க்க

மும்பை: ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்; அரசு ஊழியர்கள் அரைமணி நேரம் தாமதமாக பணிக்கு வர அனுமதி!

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒவ... மேலும் பார்க்க