Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
ரயிலில் தவறி விழுந்த வட மாநில இளைஞா் மரணம்
ஆம்பூா் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்த வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த மேல்பட்டி - பச்சை குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் புதன்கிழமை இரவு ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதிலிருந்து கேரள மாநிலம் சென்ற விரைவு ரயிலில் திருப்பூா் வரை பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு பயணித்தவா் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.