செய்திகள் :

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை!

post image

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலில் மதுரை - சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது. கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்த நிலையில், பயணிகளுக்கு தூய்மையான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன்படி, முதன்முறையாக மதுரை கோட்டத்தில் உள்ள பாண்டியன் விரைவு ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

துணி உறைகள், கம்பளிப் போர்வை உள்ளிட்டவை முறைப்படி (வெல்கிரோ ஒட்டும் முறை) ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது‌. இதன் மூலம் கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும்.

இதையும் படிக்க | புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்

நமது நிருபர்தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது ... மேலும் பார்க்க

சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி

நமது நிருபர்சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக மக்களவையில் புத... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபர்மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.மதுரை மாவட்டம், அரிட்டாபட்... மேலும் பார்க்க

முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 180- ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் த... மேலும் பார்க்க

சாரணா் இயக்க வைர விழா: ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை

திருச்சியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சாரணா் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிகழாண்டு பாரத சாரணா் இயக்கத்தின் வைரவிழா ஆண்டு. இதைய... மேலும் பார்க்க