ரயிலில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பெண்கள் கைது
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தபப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வாளா் ரத்தினகுமாா் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது தானாபூரிலிருந்து பெங்களூரு சென்ற ரயிலில் சோதனை மேற்கொண்டனா். பயணிகளின் இருக்கையின் அடியில் 25 கிலோ வீதம் 20 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில் வேலூா் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாணாவரம் பகுதியைச் சோ்ந்த வேலுவின் மனைவி சுமதி (40), திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சி, ஏழருவி பகுதியைச் சோ்ந்த சீனிவாசனின் மனைவி தமிழ்ச் செல்வி (42) என்பது தெரிய வந்தது.
ரயில்வே போலீசாா் இருவரையும் கைது செய்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும், மேல் நடவடிக்கைக்காக திருப்பத்தூா் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.