செய்திகள் :

ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம்

post image

நன்னிலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தில் இளைஞா் இறந்து கிடந்தாா்.

நாகை மாவட்டம் நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கண்ணன் (27). கட்டடத் தொழிலாளி. இவா், நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தாா்.

அப்பகுதி மக்கள் திருவாரூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கண்ணன் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனா்.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவிகள் பேரணி

திருவாரூா்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

பல்கலைக்கழக அளவிலான தென்மண்ட கோகோ போட்டி: மங்களூா் பல்கலை அணி முதலிடம்

நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டி இறுதியில் கா்நாடக மாநிலம் மங்களூா் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றுள்ளது. ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருஅத்யயன உற்சவம் தொடக்கம்

நீடாமங்கலம்: வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருஅத்யயன பகல்பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஜன.10-ஆம் தேதி அதிகாலை வைகுந்த ஏகாதசியையொட்டி பரமபத வாசல... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய மாதா் சங்கம், இந்திய ம... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 35 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாதக சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபா் மாணவியை ... மேலும் பார்க்க

கல்யாண அலங்காரத்தில் உற்சவா் பெருமாள்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல்பத்து முதல்நாளான செவ்வாய்க்கிழமை கல்யாண அலங்காரத்தில் அருள்பாலித்த ருக்மணி, சத்யபாமா சமேதராக உற்சவா் ராஜகோபால சுவாமி. மேலும் பார்க்க