செய்திகள் :

ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!

post image

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் நிலையில், அதற்கு அவைத் தலைவர் மறுப்பதால் அதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.

நேற்று மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு ரோஜா, தேசியக்கொடி வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் வேகமாக சென்று தேசியக்கொடியை வழங்கினர். ஆனால், ராஜ்நாத் சிங் அதனை வாங்க மறுத்துவிட்டார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் 'இந்த நாட்டை விற்றுவிடாதீர்கள் என்று மத்திய பாஜக அரசை வலியுறுத்தவே அவர்களுக்கு தேசியக்கொடி வழங்குகிறோம். பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள். அதானிதான் இந்த நாட்டை நடத்தி வருகிறார். அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது, ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் இந்த சதிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறுகையில்,1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் ... மேலும் பார்க்க

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்! -பாரதியாருக்கு பிரதமர் புகழாரம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிட்டார். அப்போது பேசிய அவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அமைச்சரவை பகிர்மானம் முடிவு பெற்றதா?

மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்மானத்தில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அமைச்சரவைப் பகிர்வு இழுபறியாகவ... மேலும் பார்க்க

மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது: சஞ்சய் மல்ஹோத்ரா

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மத்திய வருவாய்த் துறைச் செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் ... மேலும் பார்க்க

மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி! ஏன்?

தனக்கு எதிரான தரக்குறைவான கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அ... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 3வது நாளாக தொடரும் மீட்புப்பணி!

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகின்றது. தௌசா மாவட்டத்தில், கலிகாட் கிராமத்தில் டிச.9 அன்று 5 வயது சிறுவன் ஆர்யன் வயல்வெளியில் விளையாடிக... மேலும் பார்க்க