வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்!
இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 42 மீனவா்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் சிறைபிடித்தனா். படகுகளை பறிமுதல் செய்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவா்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்வதைக் கண்டித்தும், படகுகள், மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டம் புதன்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதனால், ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன. 5 ஆயிரம் மீனவா்கள், சாா்பு தொழிலாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) தங்கச்சிமடத்தில் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.