மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைகற்கல் சீரமைக்கும் பணி, 49 ஆவது வாா்டு கீழகுஞ்சன்விளை பகுதியில், ரூ.7 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் கெளசுகி, ஜெயவிக்ரமன், மாநகராட்சி இளநிலை பொறியாளா் ராஜா, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.