ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்
ரூ. 3,200 கோடி ஊழல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது!
மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரத்தில் 2019 -24 ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 3,200 கோடி அளவிலான மதுபானக் கொள்கை ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த ஊழல் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஜெகன் மோகன் ரெட்டியின் நெருக்கமானவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியிடம் விஜயவாடா அலுவலகத்தில் வைத்து நேற்று(சனிக்கிழமை) சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு இன்று(ஞாயிறு) ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான நாராயண சுவாமிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை 40 பேரை குற்றவாளிகளாக சேர்த்து 11 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.