செய்திகள் :

``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்

post image

மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம் கொடுத்தனர்.

ஆனால் சொன்னபடி சாஜித் போதைப்பொருளை சப்ளை செய்யவில்லை. இதையடுத்து சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து சாஜித் மற்றும் சபீர் ஆகியோரை இரவு விருந்து கொடுப்பதாகக் கூறி மும்பை அந்தேரிக்கு வரவழைத்தனர்.

அவர்கள் வந்தவுடன் அவர்களைக் கடத்திச்சென்றனர். அவர்கள் இரண்டு பேரையும் ராய்கட், நாசிக் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு கடத்திச்சென்றனர். இறுதியாக அவர்கள் இரண்டு பேரையும் உத்தரப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். அதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர். இதில் அவர்களிடமிருந்து சபீர் மட்டும் தப்பித்து மும்பைக்கு வந்தார்.

மும்பை வந்தவுடன் இது குறித்து சபீர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாண்டா என்ற இடத்திற்கு சென்று ரெய்டு நடத்தி சாஜித்தை மீட்டனர். அவரை 10 நாட்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்திருந்தனர். அவர்களை அடைத்து வைத்திருந்த சர்வார் கானும், அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை தொடர்குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டா சகீல் சகோதரன் அன்வருக்கு கைதான சர்வார் கான் மிகவும் நெருக்கமாகும்.

போலீஸார் இது குறித்து கூறுகையில்,''சாஜித்தை கொலை செய்ய கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். சபீர் வந்து சொல்லாமல் இருந்திருந்தால் கொலை செய்திருப்பார்கள். அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு பல வாகனங்களைப் பயன்படுத்தி இக்கடத்தலை செய்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சோட்டாசகீல் சகோதரர் அன்வர் சார்பாக மும்பையில் சர்வார் கான் செயல்பட்டு வந்தார். அன்வர் கொடுக்கும் பணத்தை எம்.டி போதைப்பொருளுக்கு சர்வார் கான் நிதியுதவி செய்து வந்திருக்கிறார். சாஜித்திற்கும் அந்த வகையில் தான் பணம் கொடுத்திருக்கிறால். சாஜித் போதைப்பொருள் தொடர்பாக 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் வெளி வந்தபிறகு மீண்டும் அத்தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதற்காக சர்வார் கானிடம் பணம் வாங்கி இருக்கியிருக்கிறார்''என்று தெரிவித்தார்.

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புக... மேலும் பார்க்க

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரதட்சணை கொடுமைசாதாரண குடும்பம் முதல் வசதியான கு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க