இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
லத்தூா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 551 மனுக்கள்
பவுஞ்சூா் அருகில் உள்ள லத்தூா் கிராமத்தில் வடக்கு வயலூா், பச்சம்பாக்கம் கிராமத்தினருக்காக புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமை வகித்தாா். லத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்வில் துணை வட்டாட்சியா் தேவன், சமூக பாதுகாப்பு திட்ட துணை வட்டாட்சியா் வெங்கடேசன், லத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சாந்தி ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவா்கள் கலந்து கொண்டனா்.
மகளிா் உரிமைத் தொகை கோரி 76 மனுக்கள் உள்பட 551 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.