செய்திகள் :

லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!

post image

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்நகரத்தின் பல்வேறு இடங்களில் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டதாகவும், அங்கு இரவு முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், திரிப்பொலி நகரத்தின் தெற்கு மாவட்டமான அபு சலிம்-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதப்படையின் தலைவர் அப்தெல்கனி அல்-கிக்லி கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

திரிப்பொலியின் அபு சலிம் நகர ஆயுதப்படைக்கும் அந்நாட்டின் முக்கிய துறைமுக நகரமான மிஸ்ரதாவிலுள்ள ஆயுதப் படைக்கும் இடையிலான இந்த மோதலினால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

சில மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்ட நிலையில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு நாட்டோ அமைப்பின் ஆதரவுப் பெற்ற படைகளினால் லிபியாவை பல ஆண்டுகளாக ஆண்டு வந்த முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.

அதன் பின்னர் அந்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு தலைநகர் திரிப்பொலியையும், அதன் எதிராளிப் படைகள் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரிபோலி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், திரிப்பொலியின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் க... மேலும் பார்க்க

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

நமது சிறப்பு நிருபர் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் "ஆப... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை ச... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏ... மேலும் பார்க்க