செய்திகள் :

வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பிப். 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்ஃப் மசோதா கூட்டுக் குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மார்ச் 10ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்ஃப் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!

வக்ஃப் மசோதா கூட்டுக்குழுவில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 16 பேர், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 பேர் இடம்பெற்றிருந்தனர்.

மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன, இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆளும் பாஜக கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்த 23 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தில்லி பேரவையின் துணைத் தலைவராக மோகன் சிங் தேர்வு!

தில்லி சட்டப் பேரவையின் துணை தலைவராக பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தா கொண்டுவந்த தீர்மானத்தைச் சுற்றுச்சுழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார், அ... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் வெகு விமரிசையாக நடைபெற்ற ம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா நிறைவு: தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் யோகி!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவடைந்த நிலையில், தூய்மைப் பணிகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். பிரம்மாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளா நிகழ்ந்த 45 நாள்களும் பிர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் கடன்.. 5 கொலைகள்.. 23 வயது இளைஞன் கொலைகாரனாக மாறியது ஏன்?

அளவுக்கு மீறிய கடனில் சிக்கிய இளைஞர் ஒருவர் 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலி உள்பட தனது சொந்த குடும்பத்தினர் 6 பேரை ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்கு 16,000 ரயில்கள் இயக்கம்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் மகா கும்பமேளா: பிரதமர் மோடி

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் நிறைவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி 45 நாள்கள் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வு... மேலும் பார்க்க