புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!
வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காக்கிறார்கள்: திரிபுரா முதல்வர்
வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காத்து வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகர்தலாவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கதேச விவகாரம் சர்வதேச விவகாரம். இவ்விவகாரத்தில் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை நாமும் வலியுறுத்த வேண்டும்.
நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எல்லையில் ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்க டிஜிபியிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். ஈராக் மற்றும் அதுபோன்ற பிரச்னைகள் குறித்து மட்டுமே தெருவில் இறங்கி பேசுகிறார்கள்.
ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மௌனம் காக்கிறார்கள் என்றார். வங்கதேசத்தில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரும் ‘இஸ்கான்’ துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள 24 மணி நேரமும் தயாா்: மேயர் பிரியா
அவரது ஜாமீன் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததையடுத்து, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராடியதற்காக அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் வழக்குரைஞா் சைஃபுல் இஸ்லாம் கொலை செய்யப்பட்டாா். போலீஸாா் தடியடி நடத்தி, போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய இந்தியா, ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வங்கதேச இடைக்கால அரசை வலியுறுத்தியது.