பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
வந்தவாசி அருகே ஒரே நாளில் 3 வீடுகளில் திருட்டு
வந்தவாசி அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 12 பவுன் தங்க நகைகள், ரூ.1.20 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த தாழம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமணன். இவா், வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, 7 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல,வெளியூா் சென்றிருந்த இதே கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும், மனோன்மணி வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.