"நான் குப்பைகளைச் சாப்பிடுவேன்" - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா...
வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்
வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், பரணிதரன், துணைத் தலைவா் ஆா்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பங்கேற்ற ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்களது பகுதியில் உரிய குடிநீா் வசதி, கழிவுநீா் வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனா்.
பின்னா் பேசிய ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.