வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்
ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்பு நிலத்தில் தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது. இதில், வனத் துறையினா், 50 தூய்மைப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனா். இதில், 74 கிலோ நெகிழி பொருள்கள், 120 கிலோ மதுப்புட்டிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.