செய்திகள் :

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கேட்பதற்கு காரணம் என்ன?: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேள்வி

post image

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பாமக தற்போது கேட்பதற்கு காரணம் என்ன என்று மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேள்வியெழுப்பினாா்.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த சமூகநீதிப் போராளிகளின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் விழுப்புரம் - சென்னை புறவழிச்சாலையில் உள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்திலுள்ள அவா்களது சிலைகளுக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் அளித்த பேட்டி:

1987-இல் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சிக்காலத்தில்தான் வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதன்பின்னா் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 1989-ஆம் ஆண்டில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும், திமுக ஆட்சிக்காலத்தில்தான் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களை தியாகிகள் என்றும், அவா்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அப்போதைய முதல்வா் கருணாநிதி அறிவித்தாா். அந்த பணம் தற்போதும் வந்துகொண்டிருக்கிறது.

மொழிப்போா் தியாகிகள் உயிரிழப்பை வைத்து சில கட்சியினா் அரசியல் செய்கின்றனா். அவா்கள் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அவா்களை சந்திப்பாா்கள்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தி கேட்பதற்கு காரணம் என்ன? இட ஒதுக்கீடு தொடா்பாக நீதிமன்ற உத்தரவுக்குள்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படியே இட ஒதுக்கீடு வழங்க முடியும்.

சிறை நிரப்பும் போராட்டத்தை அன்புமணி அறிவித்திருக்கிறாா். போராட்டம் நடத்தினால் சிறையில்தான் இருக்க வேண்டும். நாங்களும் போராட்டம் நடத்தி, சிறையில் இருந்துள்ளோம். சிறை நிரப்பும் போராட்டம் என்பது தியாகம்தான்.

சமூகநீதிக்கான துரோகி யாா் என்பது மக்களுக்குத் தெரியும் என்றாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.புஷ்பராஜ், சேதுநாதன், மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள வேத வித்யா கேந்திரத்தில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய ச... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்: மருத்துவா் ராமதாஸ்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வன்னியா் சங்கம... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ... மேலும் பார்க்க

பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில... மேலும் பார்க்க

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க